24-ந்தேதி நடைபெறும் திருச்சி மாநாட்டுக்கு சசிகலா, தினகரனை அழைப்போம் - மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
திருச்சியில் 24-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சசிகலா, டி.டி.வி.தினகரனை அழைப்போம் என மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திருச்சியில் 24-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சசிகலா, டி.டி.வி.தினகரனை அழைப்போம் என மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திருச்சியில் மாநாடு
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா, கட்சி பொன்விழா, மாநாடு திருச்சி நகரில் வருகிற 24-ந் தேதி மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. தொண்டர்கள் அங்கு லட்சக்கணக்கில் கூடி எங்களின் வலிமையை அங்கே நிரூபிப்பார்கள்.
சசிகலாவுக்கு அழைப்பு
இந்த விழாவிற்கு கட்சியில் இருந்து முன்பு நீக்கப்பட்ட அன்வர் ராஜா, கே.சி.பழனிச்சாமி போன்ற மூத்த முன்னோடிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள். அவர்களும் கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்வார்கள்.
மேலும் சசிகலா, டி.டி.வி.தினகரன் போன்றவர்களை முறைப்படி அழைப்போம். இதுகுறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவரும். விழாவில் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.