சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்

சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசின் முன்னாள் செயலாளர் பேசினார்.;

Update:2022-06-12 20:06 IST

கோத்தகிரி, 

கோத்தகிரியில் சுற்றுச்சூழல், பல்லுயிர் பேணுதல் மற்றும் பழங்குடியினர் கலாச்சாரம் குறித்த பங்களிப்போரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆதிவாசி நலச்சங்க தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் ஆல்வாஸ் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை முன்னாள் செயலாளர் சுர்ஜித் சவுத்ரி பேசும்போது, மலைப்பிரதேசமான கோத்தகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். இதனால் கட்டிடங்கள் அதிகமாக கட்டப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதில் அனைத்து தன்னார்வலர்கள், கிராம தலைவர்கள் பங்கேற்க வேண்டும். நான் கடந்த 1982-ம் ஆண்டு குன்னூர் சப்-கலெக்டராக இருந்த போது காணப்பட்ட சூழல் தற்போது இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்றார். கூட்டத்தில் தன்னார்வ அமைப்பினர், பழங்குடியினர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்