"எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம்" - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது,
திருச்சி,
டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி நடைபெற்றது . இந்த கூட்டத்தில் 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . இதில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ,
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்"வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வெற்றி ஒன்றே இலக்கு என வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.
அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகளை அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும்.
எங்களுக்குள் குறைகள் இருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாது. எதிரிகள் பரப்பும் அவதூறு கருத்துகளை பொருட்படுத்தாமல், மக்களுக்கு திட்டங்களை கொண்டு செல்லுங்கள். எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம்.
வெறுப்பு அரசியலால் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது.மணிப்பூர் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது ஏன்?. திமுகவுக்காக ஆளுநர் பிரச்சாரம் செய்து வருகிறார் ..இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படத் தொடங்கிவிட்டார். பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியின் வாரிசுகள் நாங்கள். பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.