நாம் தமிழர் கட்சியினா் ஆர்ப்பாட்டம்
மானூரில் நாம் தமிழர் கட்சியினா் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மானூர்:
மானூர் யூனியன் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். புதிதாக மானூர் வட்டம் ரஸ்தாவில் மதுக்கடையை திறக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமை தாங்கினார். நெல்லை தொகுதி செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், தொகுதி நிர்வாகி பியோசன், வீரத்தமிழர் முன்னணி ரத்தினகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.