தர்பூசணி விற்பனை அமோகம்

ஆண்டிப்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தர்பூசணி விற்பனை அமோகமாக நடந்தது.

Update: 2023-03-02 18:45 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கோடை காலத்தை போல வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் இயற்கை குளிர்பானங்களான தர்பூசணி, பழச்சாறு, இளநீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஆண்டிப்பட்டி-தேனி சாலை ஒரங்களில் பல இடங்களில் தர்பூசணி விற்பனை செய்யும் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர உடலை குளிர்ச்சியாக்கும் கம்மங்கூழ், மோர் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடலூர், செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, மரக்காணம், வந்தவாசி, மேல்மருவத்தூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் தேனிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தர்பூசணியை பொறுத்த வரையில் கடந்த ஆண்டைவிட தற்போது விலை அதிகமாகவே காணப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்தது 4 கிலோ அளவிலான தர்பூசணிகள் விற்பனை செய்யப்படு கிறது.

Tags:    

மேலும் செய்திகள்