தண்ணீர் தொட்டி காய்ந்து கிடக்கும் அவலம்

Update: 2023-05-11 15:39 GMT

அருள்புரம், மே.12-

கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு அந்தந்த கால்நடை மருத்துவமனைக்கு அருகில் கால்நடை தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியின் மூலம் கால்நடைகள், பறவைகள், விலங்குகள் பயனடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

கோடை காலங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் தண்ணீர் தேடி அலைந்து வந்த நிலையில் கால்நடை தொட்டி திட்டம் பெரிதும் பயன்பட்டது. ஆனால் தற்போது அந்த தொட்டிகள் போதிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கால்நடை வளர்ப்பவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.தண்ணீர் தொட்டி காய்ந்து கிடக்கும் அவலம்

மேலும் செய்திகள்