2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
தஞ்சை மாநகரில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறியுள்ளார்.;
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குடிநீர் குழாய் திருமானூர் சோதனைச்சாவடி அருகில் பழுதடைந்துள்ளதை சரி செய்யும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.