ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-06-10 20:43 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல்

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 7-தேதி முதல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து.

பரிசல் இயக்க அனுமதி

நேற்று காலை 9 மணி நிலவரப்படி 7 வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடியாக குறைந்தது. நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்