காங்கயம்
காங்கயம் நகராட்சி, 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீட்டு உபயோக குடிநீர் குழாயில் தண்ணீர் சரியாக வருவதில்லை எனத் தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முத்தூர் பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காங்கயம் நகரம் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு கவுன்சிலர் மூலம் டிராக்டரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் விரைவில் குடிநீர்க் குழாயில் சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.