ரூ.288 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்

பாபநாசத்தில் ரூ.288 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அமைச்சர் ேக.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.;

Update:2023-04-28 02:03 IST

பாபநாசத்தில் ரூ.288 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அமைச்சர் ேக.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் திட்ட பணிகள்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகள் (ஜல் ஜீவன் மிஷன்) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பாபநாசத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்.எல்.ஏ.க்கள் ஜவாஹிருல்லா, நீலமேகம், துரை.சந்திரசேகரன், நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையாளர் கருணாகரன் வரவேற்றார். தலைமை பொறியாளர் முரளி திட்ட விளக்க உரையாற்றினார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என்.நேரு, கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

5½ கோடி பேர் பயன் பெறுவர்

எனது துறைக்கு இந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 கோடியே 50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் பெரு நகரங்களாக விளங்கும் கோவை, மதுரை, சேலம் ஆகிய ஊர்களில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

மதுரை நகருக்கு கம்பத்தில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் எனது துறைக்கு மட்டும் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

544 இடங்களில்...

தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் கோவி.அய்யராசு, துரைமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வன், பாத்திமா ஜான் ராயல் அலி, ராதிகா கோபிநாத், ஒன்றியக்குழு தலைவர்கள் சுமதி கண்ணதாசன், கலைச்செல்வன், அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நாசர், பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன், பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் எழிலரசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்