இருக்கன்குடி அணையில் குறைந்து வரும் நீர்மட்டம்

இருக்கன்குடி அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Update: 2022-10-05 18:38 GMT

சாத்தூர், 

வைப்பாரு மற்றும் அர்ச்சனா நதி சந்திக்கும் இடத்தில் இருக்கன்குடி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்வதால் வைப்பாறு மற்றும் அர்ச்சுனா நதி வழியாக நீர் வந்து சேரும். ஒரு மாதமாக இருக்கன்குடி அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லை. இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து குடிநீருக்காகவும், விவசாய பாசனத்திற்காகவும் நீர் திறந்து விடவில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை 14 அடியாக இருந்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் 2 அடி குறைந்து அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக உள்ளது. மேலும் சாத்தூர் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இருக்கன்குடி அணைக்கட்டு பகுதியில் தற்போது நீரின் நிறம் மாறி காணப்படுவதோடு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நீரின் நிறம் மாறி உள்ளதால் இந்த நீரினை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அணையின் தண்ணீர் நிறம் மாறுவது குறித்து அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்