வீரபாண்டி
திருப்பூர் பலவஞ்சிபாளையம் முதல் வீரபாண்டி வரை பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்த போதும் சில இடங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு குடிநீரானது சாலையில் நடுவில் குளம் போல் தேய்க்கமடைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் முழுவதுமாக பழைய குடிநீர் குழாயை அகற்றிவிட்டு புதுக் குழாய் அமைத்து குடிநீரை முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.