கும்பகோணத்தில், 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

கும்பகோணத்தில், 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update:2023-03-22 01:24 IST

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் முக்கிய குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் கும்பகோணம் மாநகர பகுதிகளில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே மாநகர பொதுமக்கள் தங்களது தேவைக்கேற்ப குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்