குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-14 19:01 GMT

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தலைவர் குமாரவேலு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு அரசு அறிவித்தபடி 14 சதவீத அகவிலைப்படி உயர்வை 2022 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2022 ஜூலை 1 முதல் அரசு அறிவித்த மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், ஹரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்