அமராவதி பழைய ஆயக்கட்டு வாய்க்காலில் 20-ந் தேதி தண்ணீர் திறக்க முடிவு

நெல் நடவு பணிக்காக அமராவதி பழைய ஆயக்கட்டு வாய்க்காலில் 20-ந் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது.

Update: 2022-09-03 17:55 GMT


நெல் நடவு பணிக்காக அமராவதி பழைய ஆயக்கட்டு வாய்க்காலில் 20-ந் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது.

அமராவதி வாய்க்கால்

அமராவதி அணை தொடர்ந்து ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. இதனால் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் பகுதியில் நெல் நடவு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். முதற்கட்டமாக நெல் விதை விடும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தாராபுரம் பழைய அமராவதி ஆயக்கட்டு வாய்க்காலில் 20-ந் தேதி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அமராவதி பாசன 4 வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாராபுரம் பழைய அமராவதி ஆயக்கட்டு திட்டத்தில் 8 ஆயிரத்து330 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன திட்டத்தில் ஒரு போக நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 20-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இத்திட்டத்தில் தளவாய் பட்டினம் பாசன வாய்க்கால்களை தூர்வாரு வதற்காக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.4 லட்சமும், அலங்கியத்திற்கு ரூ.4 லட்சமும், கொளத்துப் பாளையத்திற்கு ரூ.12 லட்சம், தாராபுரம் ராஜ வாய்க்காலுக்கு ரூ.9.95 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணி

இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.இந்த பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தூர்வாரும் பணி முடிவடைந்ததும் 20-ந் தேதி பழைய அமராவதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தண்ணீர் திறப்பை முன்னிட்டு வயல் வெளிகளை சமன் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்