மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபயண யாத்திரை

மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரை நடைபெற்றது.;

Update: 2023-09-07 21:33 GMT


மதுைை மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரை நடைபெற்றது.

இந்திய ஒற்றுமை நடைபயணம்

ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் விதமாக, மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பெரியார் பஸ் நிலையம் அருகேயுள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ஜான்சி ராணி பூங்கா முன்புள்ள இந்திரா காந்தி சிலை வரை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் அனைவரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்க என்று கோஷமிட்டபடி சென்றனர். இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பாலு. செய்யது பாபு. ரவிச்சந்திரன். ஷானவாஸ் பேகம். உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருமங்கலம்

திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் ஆலோசனையின்பேரில், தொடங்கிய நடைபயண யாத்திரை திருமங்கலம்-மதுரை மெயின் ரோடு வழியாக உசிலம்பட்டி ரோடு, திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் வரை 2 கி.மீ. தூரம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளங்கோவன், செல்லம்பட்டி வட்டார தலைவர் ஆனந்தன், கணேசன், திருமங்கலம் நகரத்தலைவர் சவுந்தர பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமாட்சி ராஜ்குமார், உசிலை மகேந்திரன், உலகநாதன், நகர சபை கவுன்சிலர் அமுதா சரவணன், வட்டாரத் தலைவர்கள் முருகேசன், தளபதி சேகர், முத்துவேல், பாண்டியன், ஆனந்தன், புதுராஜா, வீரபத்திரன், நகரச் செயலாளர் தேசிங்குராஜா உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்