இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடைபயண இயக்கம்

ராயகிரியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடைபயண இயக்கம் நடந்தது.

Update: 2023-05-17 19:00 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே ராயகிரியில் சங்கரன்கோவில் தாலுகா குழு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 'மத்திய அரசை அகற்றக்கோரி, நாட்டையும் மக்களையும் காப்போம்' என்று மத்திய அரசை கண்டித்தும் நடைபயண இயக்கம் நடைபெற்றது.

ராயகிரி நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சொரிமுத்து, துணை செயலாளர் லிங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளர் சுப்பையா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கித்துரை, தென்காசி மாவட்ட மாதர் சங்கத் தலைவி சிவகுருவு, சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் வேலு, நிர்வாகிகள் ராமசாமி, மணிகண்டன், சங்கரையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்