தேனி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

வீடு இல்லாத மக்களுக்கு பட்டா கேட்டு, தேனி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2022-09-28 15:59 GMT

ேனி தாலுகா அலுவலகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று பெரியகுளம் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அதில் மாவட்ட செயலாளர் அண்ணாமலை, தாலுகா செயலாளர் தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். தாலுகா அலுவலக வளாகத்தில் அவர்கள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊஞ்சாம்பட்டி, கோபாலபுரம் உள்பட தேனி சுற்றுவட்டார பகுதிகளில் சொந்த வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை கேட்டு தொடர்ச்சியாக மனுக்கள் கொடுத்து வருபவர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் தேனி தாசில்தார் சரவணபாபு அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். வீட்டுமனைப்பட்டா கேட்டு ஏற்கனவே கொடுத்த மனுக்கள் பரிசீலனை செய்து பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்