வாக்காளர் சிறப்பு முகாம்

சீர்காழி தாலுகாவில் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது

Update: 2022-11-27 18:45 GMT

திருவெண்காடு :

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார், நெப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில், வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் நடந்தது. நெப்பத்தூர் கிராமத்தில் நடந்த வாக்காளர் சேர்ப்பு முகாமில் 25 இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதிய வாக்காளர்களாக இணைந்தனர். புதிய வாக்காளர்களிடம் கிராம நிர்வாக அதிகாரி உமா மகேஸ்வரி அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் அகோர மூர்த்தி, ஊராட்சி செயலர் சத்தியசீலன், வருவாய்த்துறையினர் மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதே போல் காவிரிபூம்பட்டினம் நெய்தவாசல், பூம்புகார் மீனவர் காலனி ஆகிய இடங்களில் நடந்த வாக்காளர் சேர்க்கை முகாமில் கிராம நிர்வாக அதிகாரி ராஜாமணி புதிய வாக்காளர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்