பழனியாண்டவர் கல்லூரியில் வாக்காளர் சேர்ப்பு முகாம்

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-20 21:30 GMT

பழனி தாலுகாவில் 18 வயது நிறைவடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தாசில்தார் பழனிசாமி உத்தரவின்பேரில், பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு துணை தாசில்தார் (தேர்தல்) சண்முகம் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பின்னர் 3-ம் ஆண்டு மாணவர்கள் 40 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, "சின்னக்கலையம்புத்தூரில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் வருகிற 25-ந்தேதியும், பழனியில் உள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 26-ந்தேதியும் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பழனி தாலுகாவில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அடுத்த மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந்தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே 18 வயது நிரம்பியவர்கள் ஆதார் கார்டு, புகைப்படம், 18 வயது பூர்த்தி அடைந்ததற்கான சான்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்