உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தன்னார்வலர்கள் தூய்மை பணி-வைகை ஆற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்டன
உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தன்னார்வலர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். வைகை ஆற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்டன.;
உசிலம்பட்டி,
தூய்மைப்பணி
பிரதமர் நரேந்திரமோடி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்ெகாள்ள அழைப்பு விடுத்தார். அதன்படி நாடு முழுவதும் நேற்று ஒருநாள் தன்னார்வலர்கள், பொதுமக்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைவர் முத்துராமன் தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து உசிலம்பட்டி பஸ் நிலையம், உசிலம்பட்டி முருகன் கோவில் பகுதி என பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு பொதுமக்களும் நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சோழவந்தான்
சோழவந்தான் ரெயில் நிலையத்தில் நடந்த தூய்மை பணிக்கு நிலைய கண்காணிப்பாளர் சுந்தர்கணேஷ் தலைமை தாங்கினார்.முதுநிலை பொறியாளர் சூரியமூர்த்தி, பாலமுகேஷ், சுவாதிமேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்பார்வையாளர் ஆறுமுகம் வரவேற்றார்.விவேகானந்தா கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ரகு, இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்பட என்.எஸ்.எஸ். மாணவர்கள், ெரயில்வே பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளிலும் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத் தலைவர் லதா கண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கவுன்சிலர் சத்தியபிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் தூய்மை பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.
வைகை ஆறு
மதுரை வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. வைகையில் கொட்டப்பட்ட குப்பைகள் மற்றும் பாலித்தீன் பை கழிவுகளை அகற்றினார்கள்.