விளாத்திகுளம் பத்திரகாளியம்மன் கோவில் வருசாபிஷேகம்
விளாத்திகுளம் பத்திரகாளியம்மன் கோவில் வருசாபிஷேகம் நடந்தது.;
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் பத்திரகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, வேதிகார்ச்சனை, மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதப. காலை 11 மணியளவில் யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் பிரகாரம் வழியாக வலம் வந்து பத்ரகாளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோபுர விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், திருநீறு மற்றும் சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.