விவேக் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே
பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை,
சேலம் மாவட்டம், வஞ்சிபாளையம் பனிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து வரும் 10-ந் தேதி மாலை 7.55 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 22504) இருகூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர் நிறுத்தத்தில் நின்று செல்லும், கோவை செல்லாது.
திருச்சியில் இருந்து 10-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டும் பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16843) திருப்பூர்-பாலக்காடு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படகிறது. இந்த ரெயில் திருப்பூர் வரை மட்டும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.