வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டிலை வீசிய பார்வையாளருக்கு அபராதம்

ஆத்திரமடைந்த பூங்கா ஊழியர், வெள்ளை புலி மீது தண்ணீர் பாட்டிலை வீசிய பார்வையாளரை தாக்கியுள்ளார். பிறகு அந்த பார்வையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-04-27 14:40 IST

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த ஒரு ஆண் பார்வையாளர் திடீரென தனது கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கூண்டுக்குள் இருந்த வெள்ளைப்புலி மீது வீசினார். இதை பார்த்த பூங்கா ஊழியர் உடனடியாக புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபரை கையால் தாக்கி மடக்கி பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மீது பார்வையாளர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை வீசும் காட்சி மற்றும் தண்ணீர் பாட்டில் வீசிய நபரை பூங்கா ஊழியர் தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்