விதிகளை மீறி ஸ்டிக்கர்... ரூ.2.57 கோடி அபராதம் வசூல்

வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 03:48 GMT

 சென்னை

சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்ட போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறுபவர்களிடம் போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.57 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மே மாதம் வரை 'சன் கன்ட்ரோல் பிலிம்' ஒட்டியதாக 6,279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.31.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்