விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
குன்னூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குன்னூர்
குன்னூர் மவுண்ட் ரோட்டில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மற்றும் பரிவார சன்னதிகள் புதிய வர்ணம் தீட்டப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மகாபூர்ணாகுதி, அஷ்ட பந்தை மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து விநாயகருக்கு கும்பாபிஷேகம், விமான கோபுர கும்பாபிஷேகம், பரிவார சந்நிதி கும்பாபிஷேகம் ஆகியவை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.