விழுப்புரம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளி முதல்வர் போக்சோ வழக்கில் கைது

கார்த்திகேயனை பிப்ரவரி 1ம் தேதி வரை சிறையில் அடைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update:2024-01-18 16:31 IST

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ரெட்டணை பகுதியில் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் (வயது 45) இருந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவிக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடந்த 16ம் தேதி விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவரை தொடர்ந்து மற்றொரு மாணவியும் கார்த்திகேயன் மீது பாலியல் தொல்லை புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்துள்ளனர். இதன்பிறகு பள்ளி முதல்வரை விழுப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை போலீசார் இன்று காலை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார்த்திகேயனை பிப்ரவரி 1ம் தேதி வரை சிறையில் அடைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்