ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கார்மாங்குடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-16 17:29 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே கார்மாங்குடி கிராமத்தில் ரூ.80 லட்சம் செலவில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் கார்மாங்குடி, கீரனூர், வல்லியம், மேலப்பாளையூர், கீழப்பாளையூர், மருங்கூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் எனக் கோரி கார்மாங்குடி மத்திய கூட்டுறவு வங்கி அருகில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சமூக ஆர்வலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். சதீஷ், பழனிவேல், செந்தில், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்