நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-19 20:44 GMT

நெல்லை அருகே உள்ள பாலாமடை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்த்திகேயனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாலாமடை கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறோம். பொதுமக்களின் நலனுக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பாலாமடை ஊர் பொதுமக்களின் பங்களிப்புடன் திருமண மண்டபம் கட்டப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலாக பாலாமடை பொதுமக்களின் பராமரிப்பில் மண்டபம் இருந்து வருகிறது.

ஊர் பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகளும், அரசு சம்பந்தப்பட்ட மக்கள் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளும், தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சமூக சேவை நிகழ்ச்சிகளும் எந்தவித பாகுபாடின்றி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மண்டபம் தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மக்களிடையே பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்