போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

வடமதுரையில் ேபாலீஸ்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.;

Update:2023-07-22 01:15 IST

அய்யலூர் அருகே முடக்குபட்டியில் உள்ள காளியம்மன் மற்றும் விநாயகர் கோவிலில் கடந்த 16-ந்தேதி கோவில் உற்சவ விழா தொடங்கியது. திருவிழாவின் நிறைவு நாளான 18-ந்தேதி புதுவாடி பகுதியை சேர்ந்த ஒருவர், சிலருடன் கோவிலுக்கு சென்று தனக்கு கோவிலில் முதல் மரியாதை தர வேண்டும் என்று கூறி தகராறு செய்தார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் தமிழர் தேசம் கட்சியினர் நேற்று வடமதுரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூரை சேர்ந்தவர்களுக்கு முதல் மரியாதை தரமுடியாது என்று கிராம மக்கள் கூறினர். அதனைத்தொடர்ந்து போலீசார் எதிர் தரப்பினரை அழைத்து ஊர் கட்டுப்பாட்டை மீறி செயல்படக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்