பல்ே்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி கிளை சங்க தலைவர் எருக்கூர் தாஸ் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவிச்சந்திரன், சங்க நிர்வாகிகள் கோசலை ராமன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகி நாகராஜ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் பேசினர்.
போனஸ் தொகை
ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழியர்களுக்கு தசரா பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டிய போனஸ் தொகை இதுநாள் வரை வழங்கவில்லை. எனவே மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகிலா கமிட்டி செயலாளர் அபிநயா நன்றி கூறினார்.