கிராம சபை கூட்டங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

Update: 2023-08-17 18:45 GMT

கிராம சபை கூட்டம்

கபிலக்குறிச்சி ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குணவதி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பிரபாகரன் வரவேற்றார். பெரியசோளிபாளையம் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் யமுனா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

வடகரையாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலைவாணி சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பொன்னுவேல் வரவேற்றார். பிலிக்கல்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சசிக்குமார் வரவேற்றார்.

சேளூர் ஊராட்சி

சேளூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ரோகிணி சதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் விஜயகுமார் வரவேற்றார். கொந்தளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் பொன்னம்பலம், முன்னாள் துணை தலைவர் சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் விஜயகுமார் வரவேற்றார். இருக்கூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஜானகி குழந்தைவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ரவி வரவேற்றார்.

கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாணிக்கம்நத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வசந்தகுமாரி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார். மேற்கண்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் கிராம நிர்வாகம், பொது நிதி குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியில் தணிக்கை அறிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொசவம்பாளையம்

இதேபோல் மல்லசமுத்திரம் ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சி கொசவம்பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோக மணிகண்டன், மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் நித்தியா, மின்வாரிய மோர் பாளையம் உதவி பொறியாளர் சுதர்சனன், மல்லசமுத்திரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயபிரபா, மல்லசமுத்திரம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் யுவராஜ், ஊராட்சி செயலாளர் தங்கமணி, முன்னாள் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொசவம்பாளையம் பகுதியில் மின் விளக்குகள் எரிவதில்லை. குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது. கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேண்டும். குடிநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் விவசாயம் தொடர்பான கூட்டங்களுக்கு விவசாயிகள் அழைக்கப்படுவதில்லை என விவசாயிகள் சார்பில் மாதேஸ்வரன் என்பவர் உள்ளிட்ட பலரும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஆனங்கூர்

பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைவருக்கும் குடிநீர், அனைத்து பகுதிகளிலும் தார் ரோடு, பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தல், கழிப்பிட வசதி இல்லாத இடங்களில் ஏற்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு அதிகாரிகள், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்வரமூர்த்திபாளையம்

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கு, கிழக்கு பகுதிகளில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, கார்கூடல்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, ஜேடர்பாளையம், பச்சுடையாம்பாளையம், ஈஸ்வரமூர்த்திபாளையம் உள்பட 18 ஊராட்சி மன்றங்கள் சார்பில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், தலைவிகள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

ஊராட்சி பகுதியில் அரசு நிதி ஒதுக்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது. மேலும் வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் ஊராட்சி செயலர்கள், பொதுமக்கள் குறைகளை அவ்வப்போது கேட்டு மாவட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தெரிவிக்குமாறு ஊராட்சி நிர்வாகத்திற்கு அவர் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்திற்கு நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாலமுருகன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம ஊராட்சி செயலாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்