கிராம சபை கூட்டம்

எட்டயபுரம் பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-10-02 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் கவிதா அய்யாதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சவுந்தரவல்லி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாசார்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கரை மற்றும் அரசு பொது இடங்களில் 5000 மரக்கன்றுகள் நடுவது, ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

எட்டயபுரம் அருகே உள்ள டி.சண்முகபுரம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் செல்வ விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஒவுராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராமத்திற்கு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவது, சண்முகபுரம் கிராமத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பச்சை பாண்டியன் தலைமையில், துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்