கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்
தர்மபுரியில் கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.;

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சில்லாரஅள்ளியில் கிராம நிர்வாக அலுவலராக பரமசிவம் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த அலுவலகத்தில் பல்வேறு வகையான சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக அரூர் உதவி கலெக்டர் முத்தையன் விசாரணை நடத்தினார். அப்போது பொதுமக்களின் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பரமசிவத்தை பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.