ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
திருச்சுழி அருேக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேற்கு காளையார் கரிசல்குளத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருடைய மகன் பாலகிருஷ்ணன். விவசாயியான இவர், ஒரு இடத்தை அளப்பதற்கு காளையார் கரிசல்குளம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுரளியிடம் (வயது 35)் மனு அளித்தார்.இதற்கு பாலமுரளி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அளக்க வருவதாக கூறி பாலகிருஷ்ணனை பலமுறை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ேபாலீசாரிடம் புகார் அளித்தார்.
நேற்று காலை லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சால்வன்துரை ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பகுதியில் மறைந்து நின்றிருந்தனர்.கிராம நிர்வாக அதிகாரி பாலமுரளியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரத்தை பாலகிருஷ்ணன் கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பாலமுரளியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.