ஸ்ரீபெரும்புதூரில் விஜயதசமி விழா: சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து வடமாநிலத்தினர் நடனம்

வடமாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாடுவது போல ஸ்ரீபெரும்புதூரிலும் நவராத்திரி பூஜை நடத்தி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் சிலைகளை கரைத்து வணங்கினர்.

Update: 2022-10-07 08:36 GMT

ஸ்ரீபெரும்புதூர்,

துர்கா பூஜை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வந்தாலும் மேற்கு வங்கத்தில் மிக பெரும் விழாவாகும். ஒடிசா, அசாம், பீகாரிலும் இதை மிகவும் சிறப்பாக கொண்டாடுவர். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இருப்பதால் லட்சக்கணக்கான வடமாநிலத்தினர் பணியாற்றி வருகின்றனர். இதனால் வடமாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாடுவது போல ஸ்ரீபெரும்புதூரிலும் பந்தல் அமைத்து துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி, முருகர், விநாயகர் சிலைகள் அமைத்து 9 நாட்கள் நவராத்திரி பூஜை நடத்தி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் துர்கா தேவி, லட்சுமி, சரஸ்வதி, முருகர், விநாயகர் சிலைகளை கரைத்து வணங்கினர்.

இந்த ஊர்வலத்தின் போது வடமாநில வாலிபர்கள் மற்றும் பெண்கள் வண்ண வண்ண கலர் பொடியால் முகத்தில் மாறி மாறி பூசிக்கொண்டு, மேள தாளங்களோடு நடனம் ஆடி வாண வேடிக்கையோடு வெடி வெடித்து கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்