பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவர்கள்
சிவகங்கையில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுத்தம் செய்த மாணவர்கள்
சிவகங்கையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர் அந்த பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ததாகவும், பள்ளி வளாகத்தில் கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்ததாகவும், மாணவிகள் பள்ளியில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ததாகவும் கூறப்பட்டது.
வீடியோ
மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வதும் பதிவாகி இருந்தது. இந்த வீடிேயாவை பார்த்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், மாணவர்களை பணியை செய்ய வைக்கக்கூடாது என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதையும் மீறி இதுபோன்று நடந்துள்ளதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.