மாவட்ட கோர்ட்டுகளில் காணொலி வாயிலாக விசாரணை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வரும் 5-ந்தேதி முதல் மாவட்ட கோர்ட்டுகளில் காணொலி வாயிலாக விசாரணைகளை நடத்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் வழக்குகளின் விசாரணை காணொலி வாயிலாகவும் நடத்தப்படுவதை கட்டாயமாக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 5-ந்தேதி முதல் மாவட்ட கோர்ட்டுகளில் காணொலி வாயிலாகவும் வழக்கு விசாரணைகளை நடத்த தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த வசதியை மனுதாரர்களும், வழக்கறிஞர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.