7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை அறிமுக விழா

7-வது ஆசிய ஆடவர் ஆக்கி விளையாட்டு போட்டிகள் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.;

Update:2023-08-01 11:50 IST

திருவள்ளூர், 

7-வது ஆசிய ஆடவர் ஆக்கி விளையாட்டு போட்டிகள் வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆக்கி போட்டியின் வெற்றிக் கோப்பை அறிமுக விழா நடைபெற்றது. இதில், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வீரர் வீராங்கனைகளுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, விளையாட்டு வீரர் - வீராங்கனைகள், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்