கால்நடை மருத்துவ முகாம்
கழுகுமலையில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள அழகனேரி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர் அந்தோணிராஜ் மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு சிகிச்சை அளித்தார். தொடர்ந்து சிறந்த முறையில் கன்று மற்றும் பசுமாடு வளர்த்தவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் குணசுந்தரி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.