மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி
நாட்டறம்பள்ளி அருகே மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை, அக்ரஹாரம், மேல் அக்ரஹாரம், மோட்டூர் மற்றும் வேட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்ப படிவத்தில் வழங்கியுள்ள தகவல்களை சரிபார்க்கும் பணி வீடு வீடாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் ராஜராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.