வெண்ணந்தூர் அருகேசாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினரால் பரபரப்புஅதிகாரிகள் பேச்சுவார்த்தை

Update: 2023-01-07 18:45 GMT

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட மசக்காளிப்பட்டி பகுதியில் உள்ள சாலையை இரு தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு தரப்பினர் பாரம்பரியமாக வழிபட்டு வந்த மதுரை வீரன் கோவிலை அப்புறப்படுத்த முயன்ற போது சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அளவிடும் பணி நடைபெற்று கோவில் பகுதி நெடுஞ்சாலைத்துறையில் உள்ளது என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று இரு தரப்பினரும் பயன்படுத்தி வந்த சாலையை ஒரு தரப்பினர் தங்களுக்கு உரியது என கூறி சாலையை வெட்டியும், மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெண்ணந்தூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையில் போலீசார், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாமக்கல் உதவி கலெக்டர் தலைமையில் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் மசக்காளிப்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்