வேங்கைவயல் விவகாரம்: தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய குழு நாளை வேங்கைவயலில் நேரில் விசாரணை

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-03 03:42 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். கலெக்டருக்கு நோட்டீசு இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதிலும் விசாரணை நடைபெற்று வருகிற நிலையில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் குடிநீர்தொட்டியை அசுத்தம் செய்த நபர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் குழு புதுடெல்லியில் இருந்து வேங்கைவயல் கிராமத்திற்கு நாளை (மார்ச்) 4-ந் தேதி வருகை தர உள்ளது. அந்த ஆணையத்தினை சேர்ந்த முக்கிய நபர்கள் நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்