வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள்

வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-23 19:00 GMT

வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்கள் பறிமுதல்

விபத்து, கடத்தல், திருட்டு போன்ற வழக்குகள் தொடர்பாக மோட்டார் சைக்கிள்கள், கார்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பது வழக்கம். அந்த வகையில் வேதாரண்யம் பகுதியில் நடந்த வழக்குகள் தொடர்பாக ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படு வேதாரண்யம் போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை சுற்றி புதர்கள் வளர்ந்து உரிய பராமரிப்பு இல்லாத சூழல் இருந்து வந்தது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் போலீசாரிடம் ்புகார் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் வாகனங்களை சுற்றி மண்டி இருந்த புதர்களை அகற்றினர்.

கோரிக்கை

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கோர்ட்டு மூலமாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்