கோத்தகிரியில் வாகன சோதனை:விதிகளை மீறிய 113 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

கோத்தகிரியில் நடந்த வாகன சோதனையில் விதிகளை மீறிய 113 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-02-15 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் நடந்த வாகன சோதனையில் விதிகளை மீறிய 113 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

வாகன சோதனை

கோத்தகிரி மலைப்பாதையில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வார இறுதி நாட்களில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்தநிலையில் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து போலீசார் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான், ராஜேந்திரன் உள்பட போலீசார் அரவேனு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் தொடர்ந்து வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

113 பேர் மீது வழக்கு

இதில் கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 113 வழக்குகள் போடப்பட்டு மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பாதைகளில் வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக இயக்குவது, தாழ்வான சாலையில் வாகனங்களை இயக்கும் போது 2-வது கியரில் இயக்க வேண்டும், அபாயகரமான வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்