வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ், அவரைக்காய் ரூ.100-க்கு விற்பனையானது

Update: 2023-06-27 17:33 GMT

விலை உயர்வு

வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக பீன்ஸ், தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.

ரூ.100-க்கு விற்பனை

கடந்த வாரம் ரூ.40-க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.110-க்கும், அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.100-க்கும், கத்தரிக்காய் ரூ.90-க்கும் விற்கப்படுகிறது. அதைத்தவிர மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை விட சிறிதளவு அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ இஞ்சி ரூ.240-க்கும், பூண்டு ரூ.140 முதல் ரூ.180 வரைக்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.90-க்கும், உருளைகிழங்கு ரூ.30-க்கும், கேரட் ரூ.70-க்கும், வெண்டைக்காய், பீட்ரூட் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. எனவே விலை அதிகரித்துள்ளது. சில்லரை காய்கறி மற்றும் மளிகை கடைகளில் இவற்றை விட 10 ரூபாய் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்