விபத்தில் காய்கறி வியாபாரி பலி

சங்கராபுரத்தில் நடந்த விபத்தில் காய்கறி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-04 17:17 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). காய்கறி வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக பூட்டை கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கு வேலை முடிந்ததும், மீண்டும் அவர் வீட்டிற்கு புறப்பட்டார். சங்கராபுரம் மும்முனை சந்திப்பு பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு ஜவுளி கடையின் இரும்பு கேட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரியப்பன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்