சரியான திட்டமிடல் இல்லாததால் காய்கறி விலை உயர்ந்துள்ளது

சரியான திட்டமிடல் இல்லாததால் காய்கறி விலை உயர்ந்துள்ளது என தமிமுன்அன்சாரி கூறினார்.;

Update:2023-07-17 01:38 IST

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

விவசாயத்தில் பரவல் தன்மை இல்லாததே தற்போதைய காய்கறி விலை உயர்வுக்கு காரணம். விலை உயர்ந்துள்ள தக்காளி, சின்ன வெங்காயம் போன்ற காய்கறிகள் உற்பத்திக்கு சரியான திட்டமிடல் இல்லை. இந்த தோல்வி தான் மக்களை வதைத்து கொண்டிருக்கிறது.

கருணாநிதி பெயரில் பேனா சிலை வைப்பதற்கு பதில் அதே இடத்தில் சிறந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கி தலைமுறையை செதுக்கினால் கலைஞருக்கு பெருமை அளிப்பதாக இருக்கும். இதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்தால் மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டும். நடிகர் விஜய் பயிலக திட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. இதே போன்று அனைத்து நடிகர்களும் செய்ய வேண்டும். திரைத்துறையில் அதிகமாக ஊதியம் ஈட்டும் நடிகர்களுக்கு பொருளாதார பலம் என்பது அதிகமாக இருக்கிறது. எனவே அனைத்து நடிகர்களும் ரசிகர் மன்றங்கள் மூலமாக மாணவர்களுக்கு கல்வி போதித்தால் ஏழை மாணவர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்