ராமர் கோவில் வருசாபிஷேக விழா

பனவடலிசத்திரம் அருகே ஊத்துமலையில் ராமர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-05-03 18:45 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே ஊத்துமலை மலையடிவாரம் அனுமந்தபுரி ராமர் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புனித தீர்த்தம் எடுத்து வருதல், யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராமர், லட்சுமணர், சீதா தேவி, ஆஞ்சநேயர், கல்யாண சுப்பிரமணியர், கணபதி, சப்தகன்னியர், வனதுர்க்கை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராம பக்த ஆஞ்சநேயர் பக்த சபாவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்