வராகி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா
சங்கரன்கோவில் வராகி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளம் ஜக்கம்மாள் கோவில் கீழ்புறம் அமைந்துள்ள வராகி அம்மன் கோவில் 9-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு வலம்புரி விநாயகர், வராகி, உன்மத்த பைரவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு யாக பூஜைகளும், தொடர்ந்து கும்ப கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம் மற்றும் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருச்செந்திலாண்டவர் பாதயாத்திரை குழுவினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.